அமெரிக்காவுடனான இந்திய உறவுகள் வலுவான அடித்தளங்களை கொண்டது - இந்திய வெளியுறவுத்துறை


அமெரிக்காவுடனான இந்திய உறவுகள் வலுவான அடித்தளங்களை கொண்டது - இந்திய வெளியுறவுத்துறை
x
தினத்தந்தி 7 Nov 2020 11:30 AM IST (Updated: 7 Nov 2020 11:30 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவுடனான இந்திய உறவுகள் வலுவான அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்டது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். ஜோ பிடன் எப்போதுமே பாகிஸ்தான் ஆதரவு எண்ணம் கொண்டவர். தற்போது ஜோ பிடன் அதிபர் ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய  உறவுகள் மீண்டும் மலரும் என்று பாகிஸ்தான் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

டிரம்ப் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் பாகிஸ்தான் விஷயத்தில் இன்னும் உறுதியுடன் பல நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் குடிமக்கள் தொடர்பாக டிரம்ப் ஏற்கனவே பல சட்டங்களை இயற்றியுள்ளார். எனவே, டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே பாகிஸ்தானின் ஒரே விருப்பமாக உள்ளது.

மேலும், ஜோ பிடன் தனி காஷ்மீர் கேட்கும் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர். 
அரசியலமைப்பின் 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்த சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 2020 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், காஷ்மீரிகளின் உரிமைகளை மீட்டெடுக்குமாறு பிடன் இந்தியாவை கேட்டுக் கொண்டார்.

இதனால் ஜோ பிடன் அதுபரானால் இந்தியா அமெரிக்க இடையிலான உறவுகளில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.

இந்த் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை  இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவுகள் சாத்தியமான ஒவ்வொரு துறையிலும் ஒத்துழைப்பை உள்ளடக்கிய வலுவான அஸ்திவாரங்களில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:-

இந்தியா-அமெரிக்க உறவுகள் மூலோபாயத்திலிருந்து பாதுகாப்பு வரை முதலீடு, வர்த்தகம், மக்கள் முதல் மக்கள் வரை உறவுகள் வலுவான அஸ்திவாரங்களில் தங்கியுள்ளன, மேலும் எங்கள் உறவுகள் சாத்தியமான ஒவ்வொரு துறையிலும் ஒத்துழைப்பை உள்ளடக்கியது.

அமெரிக்க அதிபர் தேர்தலில், எல்லோரையும் போலவே இந்தியாவும் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது.

விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை அமெரிக்காவில் மிகவும் வலுவான இரு கட்சி ஆதரவைக் கொண்டுள்ளது என்றும், அடுத்தடுத்த அதிபர்கள்மற்றும் நிர்வாகங்கள் இந்த உறவின் அளவை இன்னும் உயர்த்தியுள்ளன என கூறினார்
  
டிரம்பிற்கு எதிரான பிடனின் வெற்றி குறித்து பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா, “ஒரு ஜோ பிடன் வெற்றி இந்தோ-அமெரிக்க உறவுகளை மாற்றாது. கூட்டாண்மை அரசியல் கட்சிகள் மற்றும் ஆளுமைகளை மீறும் உறுதியான அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது. ”

எச் 1-பி விசா இடைநீக்கத்துடன் தொடங்கி பிடன் தொடர்ந்து மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவதோடு, கஷ்டமான வர்த்தக உறவுகளை சரிசெய்வார் என்றும் அவர் கூறினார்.



Next Story