பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாள்: நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து


பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாள்: நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 8 Nov 2020 11:41 AM IST (Updated: 8 Nov 2020 11:41 AM IST)
t-max-icont-min-icon

பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சென்று பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

புதுடெல்லி,

பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று தனது 93-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.  அத்வானி பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், அத்வானியின் காலில் விழுந்து ஆசியும் பெற்றார். 

பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் உடன் சென்று அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னதாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் அத்வானியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியதாவது:

அத்வானி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பிரார்த்தனை செய்கிறேன்.  அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தில் உள்துறை மந்திரியும் துணை பிரதமராக இருந்த அத்வானி, நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.  

கட்சியை மக்களிடம் கொண்டு சென்றார். கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் அத்வானி வாழும் உத்வேகமாக இருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story