பெயரில் உள்ள தெளிவு, பணியிலும் தெளிவை கொண்டு வரும்; பிரதமர் மோடி பேச்சு


பெயரில் உள்ள தெளிவு, பணியிலும் தெளிவை கொண்டு வரும்; பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 8 Nov 2020 5:10 PM IST (Updated: 8 Nov 2020 5:10 PM IST)
t-max-icont-min-icon

பெயரில் உள்ள தெளிவு பணியிலும் தெளிவை கொண்டு வரும் என கப்பல் போக்குவரத்து அமைச்சக பெயர் மாற்றம் பற்றி பிரதமர் மோடி கூறினார்.

ஆமதாபாத்,

குஜராத்தில் பவ்நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோகா மற்றும் சூரத் நகருக்கு அருகே அமைந்த ஹசீரா ஆகிய நகரங்களுக்கு இடையேயான பயண தொலைவை குறைக்கும் நோக்குடன் படகு போக்குவரத்து திட்டம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே இன்று தொடங்கி வைத்துள்ளார்.

அதன்பின்னர் அவர் பேசும்பொழுது, ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் முக்கிய பகுதியாக நாட்டின் கடற்பகுதி வெளிப்பட்டு உள்ளது.  அதற்கான பணிகள் நடந்துள்ளன.  அரசின் முயற்சியை ஊக்கப்படுத்த, மேலும் ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

நீர்வழி போக்குவரத்தின் மூலம் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவை வெகுவாக குறைக்க முடியும். சரக்குகளின் தங்கு தடையற்ற போக்குவரத்துக்கு உகந்த சுற்று சூழலை உருவாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பெயர் இனி துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

இதுபற்றி பேசிய அவர், அமைச்சகம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.  வளர்ந்த பொருளாதாரத்தில், பல இடங்களில், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து ஆகியவற்றை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கையாண்டுள்ளது.

இந்தியாவில், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து தொடர்புடைய நிறைய பணிகளை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் செய்துள்ளது.  பெயரில் உள்ள தெளிவானது பணியிலும் தெளிவை கொண்டு வரும் என அவர் கூறினார்.

Next Story