குஜராத் மக்களின் பயண தொலைவை படகு போக்குவரத்து குறைக்கும்; மத்திய மந்திரி மாண்டவியா
குஜராத் மக்களின் பயண தொலைவை கோகா-ஹசீரா இடையேயான படகு போக்குவரத்து குறைக்கும் என்று மத்திய மந்திரி மாண்டவியா கூறியுள்ளார்.
சூரத்,
குஜராத்தில் கோகா மற்றும் ஹசீரா ஆகிய நகரங்களுக்கு இடையே படகு போக்குவரத்து ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மாநில முதல் மந்திரி விஜய் ரூபானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறும்பொழுது, இந்த படகு போக்குவரத்து, சூரத் மற்றும் சவுராஷ்டிரா நகரங்களுக்கு இடையேயான 317 கி.மீ. பயண தொலைவை (சாலை வழி) 60 கி.மீ. ஆக குறைக்கும் என கூறினார்.
பெருமளவிலான மக்கள் சவுராஷ்டிராவில் இருந்து சூரத் நகரில் வந்து குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அங்குள்ள வைர தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இதற்காக இந்நகரங்களுக்கு இடையே நாள்தோறும் 5 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக 10 முதல் 12 மணிநேரம் வரை மக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த படகு போக்குவரத்தினால், நகரங்களுக்கு இடையே 4 மணிநேரத்தில் தொலைவை கடக்க முடியும். இதனால் மக்களின் பயண நேரத்தில் 8 மணிநேரம் மிச்சப்படுகிறது.
Related Tags :
Next Story