அழிவின் விளிம்பில் இருக்கும் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்பிரீட் மீன் இனம்
அழிவின் விளிம்பில் இருக்கும் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்பிரீட் மீன் இனத்தை விஞ்ஞானிகள், உயிரியியல் பாதுகாப்பு வல்லுநர்கள் காப்பாற்றிவருகிறார்கள்.
புதுடெல்லி
அழிவின் விளிம்பில் இருந்த ஐரோப்பாவின் அரிய வகை மீன்களில் ஒன்றான ஆஸ்பிரீட்டை சமீபத்தில் கண்டுபிடித்து உள்ளனர். 31 வயதான மீன் உயிரியலாளரான டோகோ, 6.5 கோடி ஆண்டுகள் பழமையான மீன் இனமான ஆஸ்பிரீட்டின் 12 மாதிரிகளை அக்டோபர் பிற்பகுதியில் வால்சன் ஆற்றில் கண்டுபிடித்து உள்ளார்.
எங்கள் கண்களுக்கு முன்னால் ஒரு ஆஸ்பிரீட் இருப்பது அருமையாக இருந்தது.இது ஒரு புல உயிரியலாளர் பெறக்கூடிய மிகப்பெரிய வெகுமதிகளில் ஒன்றாகும் என பிபிசிக்கு அளித்த பேட்ட்டியில் கூறி உள்ளார்.
ஆஸ்பிரீட் முதன்முதலில் ஒரு உயிரியல் மாணவரால் 1956 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது இது அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.
அரிய மீன்களின் தொகை சுமார் 10-15 என்று கூறுகின்றன, இது 2000 களின் முற்பகுதியில் சுமார் 200 ஆக உயர்ந்தது.
விஞ்ஞானிகள், உயிரியியல் பாதுகாப்பு வல்லுநர்கள் ஒன்று கூடி 6.5 ஆண்டுகள் பழமையான மீன்களைக் காப்பாற்றிவருகிறார்கள்.
Related Tags :
Next Story