கடந்த 2 வாரங்களில் டெல்லியில் வீட்டு தனிமைப்படுத்தல் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த 2 வாரங்களில் டெல்லியில் வீட்டு தனிமைப்படுத்தல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. இதை 3-வது அலை என குறிப்பிட்டு உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 28-ந்தேதிக்கு முன்பு வரை நோய்ப்பரவல் குறைந்த அளவே இருந்தது. ஆனால் அதன்பிறகு தினசரி தொற்று 5,673-ல் இருந்து படிப்படியாக அதிகரித்து, நேற்று முன்தினம் ஒரே நாளில் 7,745 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
வீட்டு தனிமைப்படுத்தல் எண்ணிக்கை கடந்த அக்டோபர் 26-ந்தேதி 16,396 ஆக இருந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களில் இந்த எண்ணிக்கை 24,723 ஆக, அதாவது 50 சதவீதம் அதிகரித்து உள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையும் 32 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
நோய்த்தொற்று இப்படி கணிசமாக உயர்ந்து இருப்பதற்கு பண்டிகை கால கூட்டங்கள், குளிர் மற்றும் மாசு உயர்வு போன்றவையே காரணங்கள் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story