இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட 17 சதவீதம் குறைந்தது


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட 17 சதவீதம் குறைந்தது
x
தினத்தந்தி 10 Nov 2020 10:49 AM IST (Updated: 10 Nov 2020 10:49 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 074- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 074- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 85 லட்சத்து 91 ஆயிரத்து 731- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 448- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 059- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்து 59 ஆயிரம் ஆக உள்ளது.  இந்தியாவில் தொற்று பாதிப்பு நேற்றைவிட 17 சதவீதம் குறைந்துள்ளது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. 


Next Story