பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பு அல்ல ; ராஷ்டீரிய ஜனதா தளம்


பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பு அல்ல ; ராஷ்டீரிய ஜனதா தளம்
x
தினத்தந்தி 11 Nov 2020 12:12 PM IST (Updated: 11 Nov 2020 12:12 PM IST)
t-max-icont-min-icon

பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பு அல்ல, நாங்கள் எங்கள் கூட்டாளிகளுக்கு ஆதரவாக நிற்போம் என ராஷ்டீரிய ஜனதா தளம் கூறி உள்ளது.

பாட்னா

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் புதன்கிழமை அதிகாலை அறிவிக்கப்பட்டன, இது நிதிஷ்கும்மாரின்  ஐக்கிய ஜனதா தளம் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மகிழ்ச்சியான வெற்றியைக் கொடுத்தது. 

243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 75 இடங்களில் வெற்றி பெற்று ராஷ்டீரிய ஜனதா தளம் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது. இருந்தாலும் பாரதீய ஜனதாவின் 74 இடங்களும் ஐக்கிய ஜனதா தளத்தின்  43 இடங்களுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கிறது.

கடந்த 2015 சட்டசபை தேர்தலில் 71 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தளம் இந்த முறை 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரசின் மெகா கூட்டணி 110 இடங்களை பெற்று உள்ளது 

முதலமைச்சர் நிதீஷ் குமார் நான்காவது முறையாக முதல் அமைச்சர் பதவி ஏற்க உள்ளார்.தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய  ஜனதா தளம் சட்டமன்றத்தில் மிக அதிக உறுப்பினர்களை கொண்ட தனிக்கட்சியாக இருக்கும்.

பீகார் தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் 23.03% வாக்குகளையும், அதைத் தொடர்ந்து பா.ஜனதா  19.5% வாக்குகளையும் ஐக்கிய ஜனதா தளம் 15.4% வாக்குகளையும் காங்கிரஸ் 9.5% வாக்குகளையும் பெற்று உள்ளது.

இது குறித்து ராஷ்டீரிய ஜனதா தலைவர் நிர்மல்குமார் கூறும் போது பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல்காந்தி பொறுப்பு அல்ல நாங்கள் எங்கள் கூட்டாளிகளுக்கு ஆதரவாக நிற்போம் என்று கூறினார்.


Next Story