மாநில அரசுகள் தனிநபர்களைக் குறிவைக்கிறது...அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்


மாநில அரசுகள் தனிநபர்களைக் குறிவைக்கிறது...அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 11 Nov 2020 2:15 PM IST (Updated: 11 Nov 2020 2:15 PM IST)
t-max-icont-min-icon

அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் வழக்கில் மாநில அரசுகள் தனிநபர்களைக் குறிவைத்தால், குடிமக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க சுப்ரீம் கோர்ட் இருப்பதை அவர்கள் உணர வேண்டும் என நீதிபதி கூறினார்

புதுடெல்லி

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் கடந்த 2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். பிரபல ஆங்கில டி.வி. சேனலான ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, அன்வய் நாயக்கிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காததால், இந்த இரட்டை தற்கொலை நடந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக அன்வய் நாயக்கின் மகள் அளித்த புகாரின்பேரில், கடந்த புதன்கிழமை அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அலிபாக் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நவிமும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். அப்போது அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் நேற்று அலிபாக் செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர் அதுவும் மறுக்கபட்டது.

இதை தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது எப்.ஐ.ஆர் நிலுவையில் இருக்கும்போது ஜாமீன் வழங்கப்படாவிட்டால் அது நீதிக்கான கேலிக்கூத்தாக இருக்கும்,  மராட்டிய அரசு சார்பில் வாதிட்ட கபில் சிபலிடம் நீதிபதி சந்திர சூட் தெர்வித்தார்

மேலும் அவர் கூறும் போத்மாநில அரசுகள் சித்தாந்தத்தின் அடிப்படையில் தனிநபர்களை குறிவைத்தல், கருத்து வேறுபாடு"குறித்து நீதிபதி சந்திர சூட் கவலை தெரிவித்தார்.

நான் அந்த சேனலைப் பார்த்தது இல்லை, நீங்கள் சித்தாந்தத்தில் வேறுபடலாம், ஆனால் நீதிமன்றங்கள் இன்று தலையிடாவிட்டால், நாம் அழிவின் பாதையில் பயணிக்கிறோம் என்பதை  மறுக்கமுடியாது.

"நாம் ஒரு அரசியலமைப்பு நீதிமன்றமாக சட்டத்தை வகுக்கவில்லை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை என்றால், யார் செய்வார்கள்? இதுபோன்ற ஒரு தனி நபரை அரசு குறிவைத்தால், ஒரு வலுவான செய்தி அனுப்பப்பட வேண்டும், குடிமக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க சுப்ரீம் கோர்ட் இருப்பதை அவர்கள் உணர வேண்டும் ... நமது ஜனநாயகம் அசாதாரணமாக நெகிழக்கூடியது 

கோஸ்வாமியின் வழக்குக்கு காவல் விசாரணை தேவையா என்று மராட்டிய மாநில அரச  கேட்டதுடன், நாங்கள் தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பான பிரச்சினையை கையாள்கிறோம் என்றும், ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரம் குறைக்கப்பட்டால் அது நீதிக்கான கேலிக்கூத்தாக இருககும் என்றும் கூறினார்.



Next Story