மரத்தின் மீது அமர்ந்து கிளையை வெட்டியதால் அதை வெட்டியவரும் கிழே விழுந்து விட்டார் - சிராக் பாஸ்வான் மீது மாஞ்சி விமர்சனம்
சிராக் பாஸ்வான் மரத்தின் மீது அமர்ந்து கிளையை வெட்டினார், கிளை முறிந்து விட்டது, ஆனால் அவரும் கீழே விழுந்து விட்டார் என இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி விமர்சித்துள்ளார்.
பாட்னா,
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் புதன்கிழமை அதிகாலை அறிவிக்கப்பட்டன, இது நிதிஷ்கும்மாரின் ஐக்கிய ஜனதா தளம் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மகிழ்ச்சியான வெற்றியைக் கொடுத்தது.
243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 75 இடங்களில் வெற்றி பெற்று ராஷ்டீரிய ஜனதா தளம் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது. இருந்தாலும் பாரதீய ஜனதாவின் 74 இடங்களும் ஐக்கிய ஜனதா தளத்தின் 43 இடங்களுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி கூறியதாவது:
''மரத்தில் அமர்ந்து கொண்டு கிளையை வெட்டக்கூடாது என சொல்வார்கள். சிராக் பாஸ்வான் விஷயத்திலும் இது உண்மையாகி விட்டது. எந்த கூட்டணியில் இருக்கிறோமோ அந்த கூட்டணியை தோற்கடிக்கும் வேலையில் அவர் ஈடுபட்டார். முடிவு தெளிவாகி விட்டது. மரத்தின் கிளை முறிந்து விட்டது. ஆனால் அவரும் கீழே விழுந்த விட்டார்.'' எனக் கூறினார்.
Related Tags :
Next Story