தேர்தலில் பெரும்பான்மை வழங்கிய பீகார் மக்களுக்கும், ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கும் நன்றி - நிதிஷ்குமார்
தேர்தலில் பெரும்பான்மை வழங்கிய பீகார் மக்களுக்கும், ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கும் நன்றி என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தலில் ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநில முதல்-மந்திரி ஐக்கிய ஜனதா தலைவருமான (ஜேடியு) நிதீஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
243 சட்டசபை தொகுதிகள் கொண்ட பீகாரில் ஜேடியு, பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மெகா கூட்டணி 110 இடங்களிலும், பிற கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 74 இடங்களிலும், ஜேடியூ 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த வெற்றி குறித்து நிதீஷ் குமார் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை வழங்கிய பீகார் மக்களுக்கு வணக்கங்கள். ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story