சிறு, குறு தொழில்களுக்கான அவசர கால கடன் வசதி மார்ச் வரை நீட்டிப்பு
சிறு, குறு தொழில்களுக்கான அவசர கால கடன் வசதி மார்ச் வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
.டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது :
கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 11 மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக 3,621 கோடி வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி ரீபண்டாக 1.32 லட்சம் கோடி ரூபாய் 39.7 லட்சம் பேருக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. மாநில மின் நிறுவனங்களுக்கு ரூ.1.18 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது.பிரதமர் ரோஜார் புரோட்ஷகான் யோஜனா திட்டம் 31.03.2019 வரை அமல்படுத்தப்பட்டது. இது அனைத்து துறைகளிலும் அமல்படுத்தப்பட்டது.
3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு மத்திய அரசின் சலுகைகள் கிடைக்கும். இதில் சேர்ந்த 1,52,899 நிறுவனங்களில் பணிபுரியும் 1,21,69,960 பேருக்கு ரூ.8300 கோடி அளவு சலுகைகளை பயன்பெற்றுள்ளனர். சிறு குறுதொழில்களுக்கான அவசர கால கடன் வசதி மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுகிறது.
கொரோனாவில் இருந்து மீளும் கட்டத்தில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்க ''ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா'' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story