டிசம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? மத்திய அரசு விளக்கம்


டிசம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 12 Nov 2020 12:08 PM GMT (Updated: 2020-11-12T17:38:50+05:30)

டிசம்பர் 1-ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

செப்டம்பர் மாதம் முதல் ஊரடரங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதாகவும் இதனால் டிசம்பர் 1-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

குறிப்பாக டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக வெளிவந்திருக்கும் செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story