ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா


ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Nov 2020 8:55 PM IST (Updated: 12 Nov 2020 8:55 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் எல்லைகள் தாண்டி நாள்தோறும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் சாமானியன் முதல்   அதிகாரம் பலம் மிக்க நபர் என யாரையும் விட்டு வைப்பதில்லை. வயது வித்தியாசமின்றி நோய் தொற்று ஏற்படுகிறது. அந்த வகையில்,

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இருந்து வருகிறார். இவர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். டாக்டரின் ஆலோசனையை பின்பற்றி வருகிறேன். விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story