பீகாரில் புதிய அரசு அமைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதீஷ் குமார்


பீகாரில் புதிய அரசு அமைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதீஷ் குமார்
x
தினத்தந்தி 13 Nov 2020 11:23 PM IST (Updated: 13 Nov 2020 11:23 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் புதிய அரசு அமைய நிதீஷ் குமார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. 74 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் கூட்டணியில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.  நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  இதனால் அந்த கூட்டணி ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்து ஆட்சி அமைப்பது பற்றி முடிவெடுப்பதற்காக நிதீஷ் குமார் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.  இதில், ஒத்துழைப்பு அளித்த அமைச்சரவையின் தனது அனைத்து சகாக்களுக்கும் முதல் மந்திரி நன்றி தெரிவித்து கொண்டார்.  கூட்டம் 10 நிமிடத்தில் முடிந்தது.

வருகிற 15ந்தேதி மதியம் 12.30 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பின் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்படும் என நிதீஷ் தெரிவித்து உள்ளார்.

நவம்பர் 29ந்தேதியுடன் முடிவடைய உள்ள சட்டசபை இன்று கலைக்கப்பட்டது.  இந்த நடைமுறைகள் முடிந்த பின்னர் பீகாரில் புதிய அரசு அமைவதற்காக நிதீஷ் குமார் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  இதனை கவர்னர் பகு சவுகான் ஏற்று கொண்டார்.

எனினும், புதிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் வரை முதல் மந்திரியாக நீடிக்கும்படி நிதீஷ் குமாரிடம் கவர்னர் கேட்டு கொண்டார்.

Next Story