நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வே காலி; நவாப் மாலிக் ஆவேச பேச்சு


நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வே காலி; நவாப் மாலிக் ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 14 Nov 2020 12:17 AM IST (Updated: 14 Nov 2020 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வே காலியாகி விடும் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் இன்று ஆவேசமுடன் கூறியுள்ளார்.

புனே,

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மகாராஷ்டிர விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது.  எனினும், முன்னாள் முதல் மந்திரி பட்னாவிஸ் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இந்த கூட்டணியில் பிளவு ஏற்படும் என கூறி வந்தனர்.

இதுபற்றி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பு நிர்வாகி மற்றும் மராட்டிய சிறுபான்மையோருக்கான மந்திரி நவாப் மாலிக் இன்று பேசும்பொழுது, எங்களுடைய கட்சியில் இணைவதற்கு சில பா.ஜ.க. தலைவர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

அதற்கான டிரெய்லர் வருகிற நாளில் வெளியிடப்படும்.  மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணியின் ஆட்சி முழு காலஅளவை நிறைவு செய்யும்.  
நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வே காலியாகி விடும்.  ஆனால் நாங்கள் அப்படி செய்ய விரும்பவில்லை என கூறினார்.

சமீபத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, பட்னாவிஸ் அரசில் இருந்து ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட விவகாரத்தினை தொடர்ந்து கட்சே தேசியவாத காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டார்.

Next Story