கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் பதவி விலகல்
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் பதவி விலகினார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக பினராயி விஜயன் உள்ளார். அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக இருந்து வந்தவர் கோடியேரி பாலகிருஷ்ணன்.
இவர் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். கோடியேரி பாலகிருஷ்ணன் தனது உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
கோடியேரி பாலகிருஷ்ணனின், இளைய மகன் பினீஷ் கோடியேரி கடந்த சில தினங்களுக்கு முன்பு போதை பொருள் வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில்தான் கோடியேரி பாலகிருஷ்ணன் கட்சி பதவியில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் அடுத்த மாதம் 1200 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து ஒருவர் பதவி விலகி இருப்பது மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story