நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தீபாவளி வாழ்த்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி
நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது;-
“இந்த புனிதமான நாளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் சக குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி மற்றும் ஒளியின் இந்த மகத்தான திருவிழா நம் நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும்.
இந்த திருவிழா நம்மை மனிதநேயத்துடன் சேவை செய்யத் தூண்டுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், ஒரு விளக்கு அதன் ஒளியைப் பகிர்வதன் மூலம் பல விளக்குகளை ஒளிரச் செய்வது போலவே, நம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் சமூகத்தின் ஏழை, ஆதரவற்ற மக்களுக்கு நம்பிக்கை மற்றும் செழிப்பின் விளக்காக மாற தீர்மானிப்போம்.
தீபாவளி என்பது தூய்மையின் பண்டிகையாகும், எனவே மாசு இல்லாத, சுற்றுச்சூழலுடன் இணைந்த தூய்மையான தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலம் இயற்கை அன்னையை போற்றுவோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
On the auspicious occasion of #Diwali, I extend my heartiest greetings and best wishes to all the fellow citizens living in India and abroad. May this grand festival of happiness and light bring delight, peace and prosperity to each and every house of our country.
— President of India (@rashtrapatibhvn) November 14, 2020
Related Tags :
Next Story