எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்தவர்களுக்கு தக்க பதிலடி: பிரதமர் மோடி


எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்தவர்களுக்கு தக்க பதிலடி: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 14 Nov 2020 2:11 PM IST (Updated: 14 Nov 2020 2:11 PM IST)
t-max-icont-min-icon

இந்திய எல்லைப்பகுதியை, ஆக்கிரமிக்க முயற்சித்தவர்களுக்கு, ராணுவம் தக்க பதிலடி கொடுத்து பாடம் கற்பித்ததாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜெய்சல்மர்,

தீபாவளி பண்டிகையை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலம், லோங்கேவாலா போஸ்ட்டில் உள்ள ராணுவ வீரர்களை நேரில் சந்தித்தார். அப்போது ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய அவர், தீபாவளி பண்டிகையை வீரர்களுடன் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.

உயர்ந்த பனிமலையோ, சூரியன் சுட்டெரிக்கும் பாலைவனமோ, எதுவாக இருந்தாலும் ராணுவ வீரர்களின் பணி வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றார். 

சர்வதேச அளவில், தங்களது நாட்டின் எல்லைகளை விரிவுப்படுத்தும் எண்ணம் அதிகரித்துள்ளதாகவும் இது தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி புகார் கூறினார். இது போன்ற  மனம் பிறழ்ந்த, 18 ஆம் நூற்றாண்டு சிந்தனையை இந்தியா எப்போதும் எதிர்க்கும் என, பிரதமர் மோடி  தெரிவித்தார். 

எல்லைப்பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்தவர்களை ஓட ஓட விரட்டியதாகவும், இந்தியா, ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறையில் தன்னம்பிக்கையுடன், எதிரிகளை முறியடித்து  தக்க பதிலடி கொடுத்து வருவதாக சீனாவை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக சாடினார்

Next Story