ராணுவ பீரங்கி வாகனத்தில் பயணித்து வீரர்களை உற்சாகப்படுத்திய பிரதமர் மோடி


ராணுவ பீரங்கி வாகனத்தில் பயணித்து வீரர்களை உற்சாகப்படுத்திய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 14 Nov 2020 3:59 PM IST (Updated: 14 Nov 2020 3:59 PM IST)
t-max-icont-min-icon

ராணுவ பீரங்கி வாகனத்தில் நின்றபடி சிறிது நேரம் பயணித்த பிரதமர் மோடி, வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

ஜெய்சல்மர், 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார். லாங்கேவாலா பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, பிரதமர் மோடி, வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் அவர்களிடையே உரையாற்றினார்.

அத்துடன் ராணுவ பீரங்கி வாகனத்தில் நின்றபடி சிறிது தூரம் பயணித்தார். அப்போது இருபுறமும் நின்று ஆரவாரம் செய்த வீரர்களைப் பார்த்து கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன.


Next Story