ஒளி வெள்ளத்தில் ஜொலித்த அயோத்தி: 5.84 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை படைத்தது
அயோத்தியில் 5.84 லட்சத்துக்கும் மேலான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உ.பி. மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தீர்ப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி உ.பி மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் விழா கோலம் பூண்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.. தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோவில் முழுவதும் தீப ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.
அயோத்தியில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல் முன்னிலையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் 5,84,572 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
Related Tags :
Next Story