டெல்லியில் தேசிய பசுமை தீர்ப்பாய தடையை மீறி பட்டாசுகளை வெடித்த மக்கள்


டெல்லியில் தேசிய பசுமை தீர்ப்பாய தடையை மீறி பட்டாசுகளை வெடித்த மக்கள்
x
தினத்தந்தி 15 Nov 2020 5:07 AM IST (Updated: 15 Nov 2020 5:07 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த முழு தடையை மீறி மக்கள் பட்டாசுகளை வெடித்தனர்.

புதுடெல்லி,

நாட்டில் தலைநகர் டெல்லியில் சமீப காலங்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  கடந்த அக்டோபர் இறுதி வாரத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரிக்க தொடங்கியது.

கடந்த 13ந்தேதி பலி எண்ணிக்கையும் 100-ஐ கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.  நாட்டின் கொரோனா வைரசின் தலைநகராக டெல்லி உருமாற கூடும் என டெல்லி உயர் நீதிமன்றம் கூட சமீபத்தில் வேதனை தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் பண்டிகை காலம் நெருங்குகிறது.  இதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என முதல் மந்திரி கெஜ்ரிவால் கேட்டு கொண்டார்.

ஆனால் டெல்லி மக்கள் அதனை கவனத்தில் கொள்ளாமல் செயல்படுகின்றனர்.  டெல்லியில் காற்று மாசு ஒருபுறம் மக்களை துன்புறுத்தி கொண்டிருக்க, அதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என கூறி பட்டாசுகளை தவிர்க்க அரசு கேட்டு கொண்டது.

இதன்பின்னர் நவம்பர் 30ந்தேதி வரை டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்கவோ அல்லது பயன்படுத்தவோ தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டது.  இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியின் ஆர்.கே. புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

Next Story