மும்பையில் 50 அடி பள்ளத்தில் டெம்போ வேன் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
சத்தாராவில் 50 அடி பள்ளத்தில் டெம்போ வேன் கவிழ்ந்த விபத்தில் நவிமும்பையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 வயது சிறுவன் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை,
மும்பையை அடுத்த நவிமும்பை, வாஷி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விடுமுறையை கொண்டாட டெம்போ வேனில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கோவாவுக்கு புறப்பட்டு சென்றனர். டெம்போவை ரிங்கு குப்தா(வயது30) என்பவர் ஓட்டினார். இதில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் டெம்போ சத்தாரா மாவட்டம், காரட் பகுதியில் உள்ள உம்ராஜ் கிராம ஆற்று பாலத்தில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது திடீரென டெம்போ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து 50 அடி பள்ளத்தில் பாய்ந்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் டெம்போவில் படுகாயங்களுடன் கிடந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மதுசுதன் நாயர்(வயது42) அவரது மனைவி உஷா(40), தம்பதியின் மகன் ஆதித்யா(23) மற்றும் சஞ்சயா (35), அவரது 3 வயது மகன் ஆரவ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மேலும் படுகாயமடைந்த டிரைவர் உள்பட 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெம்போ டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்ததாக போலீசார் கூறியுள்ளனர். எனவே போலீசார் விபத்து குறித்து டெம்போ வேன் டிரைவா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story