நிதிஷ்குமார் சுதந்திரமாக செயல்பட முடியாது: பின்னால் இருந்து சிலர் இயக்குவார்கள் - காங்கிரஸ் விமர்சனம்
நாளை காலை 11 மணிக்கு நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட்னா,
பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களில் வென்று இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக வந்தது. அதன் கூட்டணி கட்சிகளான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை விட 31 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக பெற்றிருந்தாலும், ஏற்கனவே அந்த கட்சியின் தலைமை அளித்த வாக்குறுதியின்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தான் முதல் மந்திரி பதவியை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணியின் புதிய எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை விட 31 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக பெற்றிருந்தாலும், ஏற்கனவே அக்கட்சியின் தலைமை அளித்த வாக்குறுதியின்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார், மீண்டும் பீகார் முதல்வராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை காலை 11 மணிக்கு நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிதிஷ்குமாரை மீண்டும் முதல்-மந்திரியாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர் பாஜக கூட்டணி குறித்து கூறியதாவது:-
பீகாரை பொறுத்தவரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ் குமார் அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார். ஆனால் பாஜக சதி செய்த அவரை பலவீனமாக்கி விட்டது. எனவே இந்தமுறை நிதிஷ் குமாருக்கு முன்பு போல வாய்ப்பு கிடைக்காது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும், பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் அவரை பின்னால் இருந்து சிலர் இயக்குவார்கள். சுதந்திரமாக செயல்பட முடியாது. எனக் கூறினார்.
Related Tags :
Next Story