டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சம் : அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை
டெல்லியில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால், டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் கடந்த 12 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருகிறது.
டெல்லியில் அதிகரித்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story