பீகார் துணை முதல் மந்திரி பொறுப்பு : சுஷில் குமார் மோடிக்கு பதில் தர்கிஷோர் பிரசாத்?
பீகார் துணை முதல் மந்திரியாக தர்கிஷோர் பிரசாத் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாட்னா,
பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, நிதிஷ் குமார் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
அதேபோல், பீகார் மாநில பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தர்கிஷோர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் பீகார் மாநில துணை முதல்வராக பதவி ஏற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தர்கிஷோர் பிரசாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் தற்போது பதிலளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்து விட்டார்.
சுஷில் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ''பாஜக மற்றும் சங் பரிவார் ஆசியுடன் கடந்த 40 ஆண்டுகாலமாக அரசியலில் இயங்கி வருகிறேன். கட்சித் தொண்டர் என்ற பொறுப்பை யாரும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது'' எனக் கூறியுள்ளார். இதனிடையே சுஷில் குமார் மோடி மத்திய அமைச்சராகக் கூடும் என கருதப்படுகிறது.
Related Tags :
Next Story