தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு


தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 15 Nov 2020 4:04 PM GMT (Updated: 2020-11-15T21:34:01+05:30)

மும்பை தாராவி பகுதியில் ஒருவர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில்   ஒருவருக்கு மட்டுமே  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 4 தினங்களில் 2-வது முறையாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா  பாதிப்பு பதிவாகியுள்ளது.  தாராவி பகுதியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்துய் 620 ஆக உள்ளது.  இதில், 3,282- பேர் ஏற்கனவே தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.  

தாராவி பகுதியில் தொற்று பாதிப்புடன் 27 மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தாராவி பகுதியில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முதலாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. எனினும், மாநில அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் தொற்று பாதிப்பு கணிசமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 


Next Story