காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரிக்கு கொரோனா பாதிப்பு


காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரிக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2020 2:48 PM GMT (Updated: 2020-11-16T20:18:21+05:30)

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசிடம் இருந்து  எந்த ஒரு தரப்பினரும் தப்ப முடியவில்லை. மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்கும் அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்,  காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் எம்.பியுமான மனிஷ் திவாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக இன்று  அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் எனக்கு லேசான காய்ச்சல் இருந்தது. 

எனவே நான் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டேன். இதுவரை வேறு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகிறேன்' என்று தெரிவித்துள்ளார். 

Next Story