கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத சந்தைகளை மூட பரிசீலனை: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்


கொரோனா தடுப்பு  விதிகளை பின்பற்றாத சந்தைகளை மூட பரிசீலனை:  டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 17 Nov 2020 2:21 PM IST (Updated: 17 Nov 2020 2:21 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத சந்தைகளை மூட பரிசீலித்து வருவதாக டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் 3-வது அலை என்ற நிலையை எட்டிவிட்டது. கடந்த இரு வாரங்களாக அம்மாநிலத்தில் தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது.  தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று ஆன்லைன் மூலமாக உரையாற்றிய டெல்லி  முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியதாவது.:-  டெல்லியில் கொரோனா தொற்று உயரத்தொடங்கியதில் இருந்தே மத்திய அரசுக்கு நாங்கள் பொதுவாக சில முன்மொழிவுகளை அளித்துள்ளோம். இதன்படி, தேவையேற்பட்டால், கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாத  சந்தைகளை சில நாட்களுக்கு  மூட முடியும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வந்ததால், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 200 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது” என்றார். 

Next Story