தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு; முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் ஜாமீன் மனு தள்ளுபடி + "||" + Kerala gold smuggling case; Former Chief Secretary Sivasankar's bail plea dismissed

கேரள தங்க கடத்தல் வழக்கு; முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் ஜாமீன் மனு தள்ளுபடி

கேரள தங்க கடத்தல் வழக்கு; முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் ஜாமீன் மனு தள்ளுபடி
கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல் மந்திரியின் முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
கொச்சி,

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு கடந்த ஜூலை மாதம் 5ந்தேதி வந்த பார்சலை சந்தேகத்தின்பேரில் சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் மறைத்து வைத்து, கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேசுக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.  இதனை தொடர்ந்து தப்பியோடிய அவரையும், சந்தீப் நாயர் என்பவரையும் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.  இதுவரை 20 பேர் வரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கை அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.  இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவருக்கும் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.  இதனை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.  அவர்களில் 10 பேருக்கு நீதிமன்றம் கடந்த அக்டோபரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

எனினும், வழக்கில் ஜாமீன் வழங்க கோரி சிவசங்கர் தொடர்ச்சியாக மனு செய்த நிலையில், அவை நிராகரிக்கப்பட்டன.  கேரளாவின் கொச்சி நகரில் உள்ள முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் கடந்த 12-ந் தேதி அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்தது.  இதனால் வருகிற 26-ந் தேதி வரை அவர் காவலில் வைக்கப்படுவார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.  இதனை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம் இன்று அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கடலில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீன் பிடிப்பதற்கு சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கேட்ட வழக்கு தள்ளுபடி
கடலில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட கருணாநிதி செம்மொழி விருது வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட கருணாநிதி செம்மொழி விருது வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.
3. 28 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.145 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
4. விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
5. “கட்சி பார்த்து கடனை தள்ளுபடி செய்யவில்லை, கஷ்டத்தை பார்த்துதான் தள்ளுபடி செய்தேன்” - முதலமைச்சர் பழனிசாமி
கட்சி பார்த்து கடனை தள்ளுபடி செய்யவில்லை, கஷ்டத்தை பார்த்துதான் தள்ளுபடி செய்தேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.