மும்பையில் கொரோனா பாதிப்பில் இருந்து 91 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்


மும்பையில் கொரோனா பாதிப்பில் இருந்து 91 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்
x
தினத்தந்தி 18 Nov 2020 8:35 AM IST (Updated: 18 Nov 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 91 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.

மும்பை,

மும்பையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இதில் நேற்று நகரில் புதிதாக 541 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 654 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல நகரில் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 1,565 பேர் மீண்டு வந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 339 பேர் வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது மும்பையில் 8 ஆயிரத்து 946 பேர் மட்டுமே தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரில் புதிதாக 14 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதில் 9 பேர் ஆண்கள். 5 பேர் பெண்கள். இதுவரை நகரில் 10 ஆயிரத்து 596 பேர் நோய் பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில் மும்பையில் நோய் பாதிப்பில் இருந்து 91 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 297 நாட்களாக உள்ளது. இதேபோல நகரில் தற்போது 449 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 5 ஆயிரத்து 227 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Next Story