டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் அழைப்பு


டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் அழைப்பு
x
தினத்தந்தி 18 Nov 2020 5:44 PM IST (Updated: 18 Nov 2020 5:44 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கொரோனா பரவலின் 3- ஆம் அலையை டெல்லி எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் உச்சத்திற்கு வந்துள்ள நிலையில்,  சில கட்டுப்பாடுகளை டெல்லி அரசு மீண்டும் கொண்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் டெல்லியில் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.  நாளை காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் டெல்லியில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. 

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கெஜ்ரிவால் கூறியதாவது: -  டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. எனினும், போதுமான அளவில் படுக்கைகள் உள்ளன. தீவிர சிகிச்சை பிரிவுக்கான படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளன. ஆனால், இதற்கு தீர்வு காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். டெல்லியில் தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் எங்களின் மருத்துவர்கள் சுகாதார பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்” என்றார். 


Next Story