காங்கிரஸ் மூத்த தலைவர் ஏகே அந்தோனிக்கு கொரோனா பாதிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏகே அந்தோனிக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2020 7:05 PM IST (Updated: 18 Nov 2020 7:05 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனி மற்றும் அவரது மனைவி எலிசபெத் அந்தோனிக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனி மற்றும் அவரது மனைவி எலிசபெத் அந்தோனிக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அவரது மகன் அனில் கே அந்தோனி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: -
"எனது தந்தை ஏ.கே. அந்தோனி மற்றும் தாய் எலிசபெத் அந்தோனி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருவரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல் நிலை சீராக உள்ளது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்யவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது ஏ.கே. அந்தோனி மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.

Next Story