இந்தியாவில் கொரோனா இறப்பு : 1.46% -ஆக குறைந்தது; 1% ஆக குறைக்க இலக்கு


இந்தியாவில் கொரோனா  இறப்பு :  1.46% -ஆக   குறைந்தது;  1% ஆக குறைக்க இலக்கு
x
தினத்தந்தி 23 Nov 2020 10:47 AM IST (Updated: 23 Nov 2020 10:47 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு இறப்பு விகிதம் 1.46 சதவீதமாக ஆக குறைந்து உள்ளது ; இதை 1 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இறப்பு விகிதம் (சி.எஃப்.ஆர்) ஞாயிற்றுக்கிழமை 1.46 சதவீதமாக குறைந்தது. கொரோனா காரணமாக  ஏற்பட்ட முதல் மரணம் 2020 மார்ச் 12 அன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால், இந்திய அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை நெருங்குகிறது.

நாட்டில் பொதுவான காய்ச்சல் காரணமாக ஆண்டுதோறும் நிகழும் இறப்புகளின் எண்ணிக்கையை மனதில் கொண்டு அரசாங்கம் இறப்பு விகிதத்தை 1 சதவீதமாக  இலக்கு நிர்ணயித்து உள்ளது.

நாடு முழுவதும் இருந்து அதிகபட்ச எண்ணிக்கையிலான இறப்புகளை பத்து மாநிலங்கள் பதிவு செய்து உள்ளன. மோசமாக பாதிக்கப்பட்டமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், டெல்லி அதிகபட்சமாக புதிய இறப்புகளைப் பதிவுசெய்கிறது. ஞாயிற்றுக்கிழமை, கொரோனா காரணமாக 121 இறப்புகள் டெல்லியில்  பதிவாகியுள்ளன, வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,391 ஆக உள்ளது, இது  நாடு முழுவதும் இருந்து பதிவான மொத்த புதிய இறப்புகளில் 22 சதவீததுக்கும் அதிகமாக உள்ளது.

அதிக கொரோனா இறப்புகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்கள் மராட்டியம், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகும்.
1 More update

Next Story