மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை


மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு  மத்திய அரசு தடை
x
தினத்தந்தி 24 Nov 2020 12:50 PM GMT (Updated: 24 Nov 2020 12:50 PM GMT)

மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது


புதுடெல்லி: 


தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் 43 மொபைல் செயலிகளை மத்திய அரசு தடை செய்து உள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு  பாதிப்பு ஏற்படும் செயல்களில் ஈடுபட்ட மொபைல் செயலிகளுக்கு  எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69 ஏ பிரிவின் கீழ் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

"இந்திய இணைய குற்றவியல் ஒருங்கிணைப்பு மையம், உள்துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட விரிவான அறிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ளவர்கள் இந்த செயலிகளை பயன்படுத்துவதை  தடுப்பதற்கான உத்தரவை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது" என்று அரசாங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் எதிர்த்து பல செயலிகளை கடந்த ஜூன் 29 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் அரசாங்கம் தடைசெய்தது. தடைசெய்யப்பட்ட செயலிகளில் பெரும்பாலானவை சீனவை  சேர்ந்தவை. கடந்த 2020 ஜூன் 29 ஆம் தேதி இந்திய அரசு 59 மொபைல் செயலிகளும்  2020 செப்டம்பர் 2 ஆம் தேதி 118 செயலிகளும் தடை செய்யப்பட்டன. 

Next Story