56வது எழுச்சி நாள்; எல்லை பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து


56வது எழுச்சி நாள்; எல்லை பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து
x
தினத்தந்தி 1 Dec 2020 9:45 AM IST (Updated: 1 Dec 2020 9:33 AM IST)
t-max-icont-min-icon

56வது எழுச்சி நாளை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

புதுடெல்லி,

எல்லை பாதுகாப்பு படையினரின் 56வது எழுச்சி நாள் இன்று கொண்டாடப்படுகிறது.  எல்லை பாதுகாப்பு படை பிரிவு அமைக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைந்து 56வது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது.  இதனையொட்டி இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் எழுச்சி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், துணிச்சலான படையாக எல்லை பாதுகாப்பு படையானது தனித்துவமுடன் செயல்பட்டு வருகிறது.  நாட்டை பாதுகாக்கும் பணியில் மற்றும் தேசிய பேரிடர் காலங்களில் குடிமக்களுக்கு உதவிடுவதில் ஈடுபாட்டுடன் பணிபுரிந்து வருகிறது.  எல்லை பாதுகாப்பு படையால் நாடு பெருமை அடைகிறது என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள செய்தியில், எல்லை பாதுகாப்பு படையின் 56வது எழுச்சி நாளை முன்னிட்டு, அவர்களின் சேவை மற்றும் நாட்டுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக தைரியமிக்க அனைத்து வீரர்களையும் நான் வணங்குகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

Next Story