ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்களியுங்கள் : ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் வாக்களித்த பின் ஓவைசி பேட்டி


ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்களியுங்கள் : ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் வாக்களித்த பின் ஓவைசி பேட்டி
x
தினத்தந்தி 1 Dec 2020 9:44 AM IST (Updated: 1 Dec 2020 2:33 PM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

ஐதராபாத்,

ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.  மாநகராட்சி தேர்தல் என்ற போதிலும் அங்கு சட்ட சபை தேர்தலுக்கு இணையாக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்றது. ஐதராபாத் மேயரை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.  

உள்துறை அமைச்சர் உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டனர். தெலங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்), அகில இந்திய மஜ்லீஸ் கட்சியான ஏஐஎம்ஐஎம் உடன் கூட்டணி அமைத்து இத்தேர்தலில் போட்டியிடுகிறது. 

இந்த கூட்டணியை எதிர்த்து, பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது.  மாநகராட்சி தேர்தல் என்ற போதிலும் முக்கிய தலைவர்களின் பிரசாரத்தில் இந்தத் தேர்தல் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. 

மாநகராட்சி தேர்தலில் வாக்களித்த பின்பு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஐதராபாத் எம்.பி ஓவைசி கூறுகையில், “ ஐதராபாத் மக்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்த தங்கள் வாக்கினை மக்கள் பதிவு செய்ய வேண்டும்” என்று கூறினார். 


Next Story