சீனா அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக பிரம்மபுத்திராவில் அணைகட்ட இந்தியா திட்டம்


சீனா அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக பிரம்மபுத்திராவில்  அணைகட்ட இந்தியா திட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2020 9:54 PM IST (Updated: 1 Dec 2020 9:54 PM IST)
t-max-icont-min-icon

பிரம்மபுத்ரா ஆற்றில் சீனா அணைகளை கட்டக்கூடும் என்ற தகவலை தொடர்ந்து. இந்தியா அருணாசல பிரதேசத்தில் 10 ஜிகாவாட் நீர்மின் திட்டத்தை உருவாக இந்தியா பரிசீலித்து வருவதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

பிரம்மபுத்ரா ஆற்றின் ஒரு பகுதியில் சீனா அணைகளை கட்டக்கூடும் என்ற தகவலை தொடர்ந்து. இந்தியா தொலைதூர கிழக்கு மாநிலத்தில் 10 ஜிகாவாட் (ஜி.டபிள்யூ) நீர்மின் திட்டத்தை  உருவாக்க இந்தியா பரிசீலித்து வருவதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

சீனாவில் யர்லுங் சாங்போ என்றும் அழைக்கப்படும்  நதி திபெத்திலிருந்து இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்திலும், அசாம் வழியாக வங்காள தேசத்தில் பாய்கிறது. 

சீன அணை திட்டங்களின் பாதகமான தாக்கத்தை தணிக்க அருணாச்சல பிரதேசத்தில் ஒரு பெரிய அணை வைத்திருப்பது காலத்தின் தேவை ”என்று இந்தியாவின் மத்திய நீர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி டி.எஸ். மெஹ்ரா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது எங்கள் முன்மொழிவு அரசின்  மிக உயர்மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. இந்திய திட்டமானது சீன அணைகளின் பாய்ச்சலின் தாக்கத்தை ஈடுசெய்ய ஒரு பெரிய நீர் சேமிப்பு திறனை உருவாக்கும். முறையாக, சீனாவிடம் நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு திட்டமும் இந்தியாவுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்று நாங்கள் அவர்களிடம் கூறி உள்ளோம் . அவர்கள் ஒரு உத்தரவாதம் அளித்துள்ளனர், ஆனால் அவர்களின் உத்தரவாதம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது" என்று மெஹ்ரா கூறினார்.

இந்தியா-சீனா உறவுகள் குறித்த நிபுணர் பிரம்மா செல்லானி டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது

இமயமலையில் சீனாவின் நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு, அதன் கொல்லைப்புறத்தில் கடல் ஆக்கிரமிப்புகள், மற்றும் சமீபத்திய செய்தி ஒரு நினைவூட்டலாக இருப்பதால், நீர் போர்களை  கூட இந்தியா எதிர்கொள்கிறது" என்று கூறி உள்ளார்.

மூத்த நிர்வாகி ஒருவரை மேற்கோள் காட்டி, பிரம்மபுத்திராவின் ஒரு பிரிவில் சீனா  60 ஜிகாவாட் வரை நீர் மின் திறன் உருவாக்க முடியும் என்று சீன அரசு ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன. 

தொழில்துறை மாநாட்டில் பேசிய சீன அரசுக்கு சொந்தமான மின் கட்டுமானக் கழகத்தின் தலைவர் யான் ஜியோங், நதியில் அணை கட்டும் திட்டம் ஒரு "வரலாற்று வாய்ப்பு" என கூறி உள்ளார்.

Next Story