தேசிய செய்திகள்

அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு + "||" + COVID-19 Vaccine: Govt never spoke about vaccinating the entire country, says Health Ministry

அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு

அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு
அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,

கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் போடப்படாது என தெரியவந்துள்ளது.

டெல்லியில்  நிருபர்களை சந்தித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா இதுபற்றிய ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், “கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் நோக்கம், வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதுதான். 

வைரஸ் பரவும் ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போட முடிந்து, பரவல் சங்கிலியை உடைக்க முடிந்தால், ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியது இல்லை என கூறினார். இதை மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷணும் உறுதிபடுத்தினார்.

அவர் கூறுகையில், ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்.