பாஜக எம்.பி.யான பாலிவுட் நடிகர் சன்னிதியோலுக்கு கொரோனா பாதிப்பு


பாஜக எம்.பி.யான பாலிவுட் நடிகர் சன்னிதியோலுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2020 11:12 AM IST (Updated: 2 Dec 2020 11:12 AM IST)
t-max-icont-min-icon

பாஜக எம்.பி.யான பாலிவுட் நடிகர் சன்னிதியோலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

மும்பை,

பிரபல இந்தி நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பாட்டுள்ள சன்னி தியோலுக்கு இமாச்சலப் பிரதேசம் மணலியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இத்தகவலை இமாச்சலப் பிரதேச சுகாதாரத் துறை செயலர் தெரிவித்தார். தற்போது குலுவில் தங்கி இருக்கும் சன்னி தியோல் இதன் காரணமாக மேலும் சில நாள் தங்கி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Next Story