மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு சுஷில்குமார் மோடி வேட்புமனு தாக்கல்
பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு சுஷில்குமார் மோடி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பாட்னா,
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் அம்மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கான ஒரு இடம் காலியானது.
இந்நிலையில் அந்த இடத்துக்கான இடைத்தேர்தலில் பீகார் மாநிலத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான சுஷில்குமார் மோடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பாட்னா கோட்ட ஆணையர் சஞ்சய் அகர்வாலிடம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரிகள் தார்கிஷோர் பிரசாத், ரேணுதேவி, கால்நடை மற்றும் மீன்வளத்துறை மந்திரி முகேஷ் சகானி, பிற மந்திரிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர்.
பீகார் சட்டமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 125 உறுப்பினர்கள் இருப்பதால், மாநிலங்களவைக்கு சுஷில்குமார் மோடி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
Related Tags :
Next Story