நாட்டின் டாப் 10 காவல் நிலைய பட்டியலில் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு 2வது இடம்
நாட்டின் சிறந்த காவல் நிலையத்திற்கான டாப் 10 பட்டியலில் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு 2வது இடம் கிடைத்து உள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் சிறந்த காவல் நிலையத்திற்கான டாப் 10 பட்டியலை மத்திய உள்விவகார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது. இதில் முதல் இடம் மணிப்பூர் மாநிலத்தின் தவுபால் நகரில் உள்ள நாங்போக் செக்மாய் காவல் நிலையத்திற்கு கிடைத்து உள்ளது.
இதேபோன்று தமிழகத்தின் சேலம் மாநகரில் உள்ள சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு 2வது இடம் கிடைத்து உள்ளது. இந்த பட்டியலில் மற்றொரு வடமாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் சங்லாங் நகரில் உள்ள கர்சாங் காவல் நிலையம் 3வது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story