'ரெப்போ விகிதம்' வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ்
'ரெப்போ விகிதம்' வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
'ரெப்போ விகிதம்' எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிதிக்கொள்கைக் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.ரெப்போ வட்டி விகிதம் 4% என்ற அளவிலும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35% என்ற அளவிலேயே தொடரும். இதனால் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது.2021 வளர்ச்சி வீதம் -7.5% இருக்கும்.
ஊரக பகுதியில் தேவை அதிகரிப்பு காரணமாக பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்துவதுடன், கிராமப்புறங்களின் தேவை அதிகரிப்பும் நல்ல பலத்தை வழங்கும். பொருளாதார வளர்ச்சியானது, 3ம் காலாண்டில் பிளஸ் 0.1 சதவீதமாகவும், 4ம் காலாண்டில் பிளஸ் 0.7 சதவீதமாகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story