ஆந்திராவில் புதிதாக 599- பேருக்கு கொரோனா தொற்று


ஆந்திராவில் புதிதாக 599- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 4 Dec 2020 10:09 PM IST (Updated: 4 Dec 2020 10:09 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இன்று புதிதாக 599- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. அம்மாநிலத்தில் இன்று புதிதாக  599 -பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 8,70,675 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,422 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8,57,233 பேர் குணமடைந்துள்ளனர், 7,020 பேர் பலியாகியுள்ளனர்.


Next Story