கேரளாவில் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு கொரோனா
கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,31,615-ஆக அதிகரித்துள்ளது.
இதில் கொரோனா தொற்றால் 61,393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து புதிதாக 5,820 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,67,694-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 32 பேர் பலியானதால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2390-ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story