தமிழக அரசியலில் ரஜினிகாந்தின் கட்சி தாக்கத்தை ஏற்படுத்துமா? தினேஷ் குண்டுராவ் பதில்


தமிழக அரசியலில் ரஜினிகாந்தின் கட்சி தாக்கத்தை ஏற்படுத்துமா? தினேஷ் குண்டுராவ் பதில்
x
தினத்தந்தி 6 Dec 2020 6:51 AM IST (Updated: 6 Dec 2020 6:51 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசியலில் ரஜினிகாந்தின் கட்சி தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு தினேஷ் குண்டுராவ் பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு, 

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில்  நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவருடன் பா.ஜனதாவை சேர்ந்த பலர் தொடர்பில் உள்ளனர். ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சியை பதிவு செய்யவில்லை. அவரது கட்சியின் கொள்கை, திட்டங்கள் என்ன என்பது தெரியவில்லை. 

அவரது கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறதா? அல்லது கூட்டணி அமைக்கிறதா? என்ற விஷயத்தில் தெளிவு இல்லை. இந்த விஷயங்களில் தெளிவு கிடைத்தால் மட்டுமே, அவரது கட்சி தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை மதிப்பிட முடியும். அவர் என்ன செய்ய நினைக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Next Story