அம்பேத்கர் நினைவு தினம்: தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் - பிரதமர் மோடி டுவீட்


அம்பேத்கர் நினைவு தினம்: தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் - பிரதமர் மோடி டுவீட்
x
தினத்தந்தி 6 Dec 2020 8:46 AM IST (Updated: 6 Dec 2020 8:46 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கரின் 64-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 64வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

மகாபரினிர்வன் திவாஸில் சிறந்த டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரை நினைவு கூர்கிறேன். அவரது எண்ணங்களும் இலட்சியங்களும்  மில்லியன் கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தைத் தருகின்றன. நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள்  பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

Next Story