நாட்டை பாகுபாட்டில் இருந்து விடுவிப்பதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் மரியாதை - ராகுல்காந்தி டுவீட்


நாட்டை பாகுபாட்டில் இருந்து விடுவிப்பதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் மரியாதை - ராகுல்காந்தி டுவீட்
x
தினத்தந்தி 6 Dec 2020 2:01 PM IST (Updated: 6 Dec 2020 2:01 PM IST)
t-max-icont-min-icon

நாட்டை பாகுபாட்டில் இருந்து விடுவிப்பதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

அம்பேத்கரின் 64வது ஆண்டு நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாகுபாடற்ற இந்தியாவை உருவாக்குவதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த மரியாதை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நாட்டை கட்டமைப்பதில் அம்பேத்கரின் பங்களிப்பை நாம் இன்று நினைவில் கொள்கிறோம். இந்தியாவை அனைத்து விதமான பாகுபாட்டிலிருந்தும் விடுவிப்பதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை என பதிவிட்டுள்ளார்.

Next Story