கொரோனாவை கையாள்வதில் டிரம்ப் தோல்வி, பிரதமர் மோடி துணிச்சலான நடவடிக்கை எடுத்தார் : ஜேபி நட்டா


கொரோனாவை கையாள்வதில் டிரம்ப் தோல்வி, பிரதமர் மோடி  துணிச்சலான நடவடிக்கை எடுத்தார் : ஜேபி நட்டா
x
தினத்தந்தி 6 Dec 2020 7:00 PM IST (Updated: 6 Dec 2020 7:02 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா விவகாரத்தை டிரம்ப் நிர்வாகம் சரியாக கையாளாத நிலையில், இந்தியாவில் பிரதமர் மோடி துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்ததாக ஜேபி நட்டா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் மோடி   திறம்பட செய்து வருவதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். உத்தரகண்டில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய  ஜேபி நட்டா கூறியதாவது: அமெரிக்காவில் கொரோனாவை கையாள்வதில் டிரம்ப் நிர்வகம் தோல்வியடைந்துள்ளது. 

இதனால், அதிபர் தேர்தலிலும் டிரம்ப் தோல்வி அடைந்தார்.  ஆனால், ஊரடங்கு என்ற துணிச்சலான நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார். சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியாக அமெரிக்கா இன்னும் தடுமாறி வருகிறது. ஆனால் இந்தியாவில், நாம் அத்தகைய நிலையற்ற தன்மையிலிருந்து மீண்டு வந்துள்ளோம்” என்றார். 

Next Story