கேரளாவில் மேலும் 4,777 பேருக்கு கொரோன பாதிப்பு


கேரளாவில் மேலும் 4,777  பேருக்கு கொரோன பாதிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2020 8:06 PM IST (Updated: 6 Dec 2020 8:06 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் மேலும் 4 ஆயிரத்து 777 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 777 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 36 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 60 ஆயிரத்து 924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 217 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 72 ஆயிரத்து 911 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ்  பாதிப்பால் இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா  பாதிப்புக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது.

Next Story